Thursday, 8 July 2021

சந்தோசமாய் இருப்போம்

 #அருமையான_கதை


🌺ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பியபோது, அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. 


🌺 அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு

      அவனுடையது தான்..


🌺 அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை

     கொடுத்து வாங்க பலரும் தயாராக

     இருந்தனர். ஆனால் இவன் தான்

     விற்கவில்லை.  


🌺 இப்போது, அந்த வீடு அவன் கண் முன்னே

     எரிந்துகொண்டிருந்தது. 


🌺ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை

     பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தீ

     முழுவதுமாக பரவிவிட்டதால் அதை

     அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று

     எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .


🌺வணிகனோ செய்வதறியாமல் கண்ணில்

     நீரோடு புலம்பிகொண்டிருந்தான். 


🌺"ஐயோ என் வீடு..! என் வீடு.."! என்று

     அலறினான்.


🌺அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து,

     “தந்தையே ஏன் அழுகிறீர்கள்..? இந்த                 

      வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு        

      லாபத்திற்கு விற்றுவிட்டேன்.. இதனால் 

      நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான். 


🌺 இதைக் கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. 


🌺 அவனது சோகமனைத்தும் மறைந்து

     மகிழ்ச்சி உண்டானது. 


🌺 இப்போது வணிகனும் கூடியிருந்த அந்த

     கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை

     பார்க்க தொடங்கினான். 


🌺 'அதே வீடு தான்..'

🌺 'அதே நெருப்பு தான்..'


🌺ஆனால் சில வினாடிகளுக்கு முன்

    இருந்த தவிப்பும் சோகமும் இப்போது

    அவனிடம் இல்லை.


🌺 சிறிது நேரத்தில் வணிகனின்

    இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே

    ஏன் இப்படி கவலையில்லாமல்

    சிரிக்கிறீர்கள்..?  நாங்கள் விற்ற இந்த

    வீட்டிற்கு முன்பணம் மட்டுமே

    வாங்கியுள்ளோம். முழுத் தொகை இன்னும்     

    கைக்கு வரவில்லை. 


🌺 வீட்டை வாங்கியவன் இப்போது மீதி

    பணத்தை தருவானா என்பது சந்தேகமே..?

    என்று கூறினான்.


🌺 இதைக் கேட்ட வணிகன் அதிர்ச்சி

    அடைந்தான். மீண்டும் சோகத்தில்

    ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப

    ஆரம்பித்தான். 


🌺 'தனது உடமை எரிகிறதே' என்ற எண்ணம்

       மீண்டும் அவனை வாட்டியது.


🌺 சில மணித்துளிகளுக்குப் பின்பு 

      வணிகனின் மூன்றாவது மகன் ஓடி     

      வருகிறான். “தந்தையே கவலை 

      வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய 

       மனிதன் மிகவும் நல்லவன் போலும். 


🌺 இந்த வீட்டை வாங்க அவன் முடிவு

    செய்தபோது, வீடு தீ பிடிக்கும் என்று

    உங்களுக்கும் தெரியாது எனக்கும்

    தெரியாது. 


🌺 ஆகையால் நான் பேசியபடி முழு

     தொகையை கொடுப்பது தான் நியாயம்

     என்று என்னிடம் இப்போது தான் சொல்லி

     அனுப்பினான்..” என்று மகிழ்ச்சியோடு

     தெரிவித்தான். 


🌺 இதைக் கேட்ட வணிகனுக்கோ ஏக

     சந்தோஷம். 


🌺 கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி

    மகிழ்ந்தான். கண்ணீரும், சோகமும்

    மீண்டும் காணாமல் போய்விட்டது. 


🌺 மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று

    வேடிக்கை பார்க்க தொடங்கினான்.


 #இங்கு_எதுவுமே_மாறவில்லை 

 #அதே_வீடு #அதே_நெருப்பு #அதே_இழப்பு


 இது என்னுடையது என்று நினைக்கும்போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

 

இது என்னுடையதல்ல என்று நினைக்கும்போது  உங்களை சோகம் தாக்குவது இல்லை.


*உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை*


*ஒருவனுக்கு மட்டும் எதுவுமே சொந்தமானது அல்ல. அனைத்துமே அழிய கூடியது. 


 #நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட

 காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது

 வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது..


இதைத்தான் அனைத்து மதமும் சொல்கிறது..


எதை நீ இழந்தாய்..? எதற்காக அழுகிறாய்..?

இன்று எது #உன்னுடையதோ, அது நாளை #மற்றொருவருடையது..


மாற்றம் என்பது மட்டுமே மாறாதது..

கடமையைச் செய்... பலனை எதிர்பாராதே... ஏனெனில் கடமைக்கான பலனை இறைவன் தர மறப்பதில்லை


*அன்பாய் இருப்போம்..*

*பண்பாய் இருப்போம்..*

*நட்பாய் இருப்போம்..*

*உண்யையாய் இருப்போம்*


*அனைவர் நெஞ்சிலும் நீங்காமலிருப்போம்*

No comments:

Post a Comment