👣வாழ்க்கை எனும் பாதை....
படித்ததில் பகிர்ந்தது.
வாழ்க்கை பாதை
எல்லோருக்கும்
ஒரே மாதிரியானவை
அல்ல,
சிலர்
மலர்கள் மேல்
நடக்க கூடும்.
சிலர்
முட்கள் மேல்
நடக்க கூடும் .
சிலர்
மலர்களிலும்,
முட்களிலும்
நடக்க கூடும் .
மலர்களில் நடந்த
போதிலும்
சில வேளைகளில்
அவர்களுக்கும்
கால்கள் வலிக்க கூடும்.
முட்கள் என்றால் ,
உன் அடுத்த அடியில் ,
கவனம் கூடும்.
மலர்களும் ,முட்களும்
என்றால் ,
எங்கே எப்படி
நடக்க வேண்டும் என்ற
தெளிவு கூடும்.
செல்லும் பாதையில்
பேச்சு துணைக்கு
சிலர் வர கூடும் .
பேசாமலும் சிலரை
கடக்க கூடும் .
வழி காட்ட சிலர்
வர கூடும்.
தவறான வழியை காட்டவும்
சிலர் வர கூடும்.
விழும் போது தூக்கி விட
சிலர் வர கூடும் .
விழும் போது
சிரிப்பதற்கும்
சிலர் வர கூடும்.
முந்தி நடக்கையில்
முதுகுக்கு பின்னால்
தட்டி குடுக்க
சிலர் வர கூடும் .
போக விட்டு
புறம் பேச
சிலர் வர கூடும்.
இளைப்பாறும் மரமாய்
சிலர் நிழல் குடுக்க கூடும் .
உன் நிழல் மட்டுமே
துணை என்ற
நிலையும் வர கூடும்.
வழி(லி) எதுவாயினும் ,
காணும் மனிதர் யாராயினும்
பாதை முடியும் வரை
பயணித்தே ஆக வேண்டும் .
இடையில் முடங்கி விடாதே ,
இயலாமல் முடித்து விடாதே .
முடியும் வரை கால்களை
கொண்டு நடந்து விடு
முடிந்தால் ஓடி விடு .
முடியாமல் முடங்கும்
போது ,
(தன்னம்பிக்)கை யை கொண்டு
ஒரு அடியேனும்
முன்னுக்கு சென்று விடு....
No comments:
Post a Comment