நம்பிக்கை எத்தனை வலிமையான சொல்
ஆனால் இந்த நம்பி நம்பியே கெட்டு போனேன்,
நம்பி கழுத்தை அறுத்துவிட்டான்
நம்பி ஏமாற்ற பட்டேன்
நம்பிக்கை துரோகம்
இப்படி நம்பிக்கை மேல் பலவகை குற்றசாட்டுகளால் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நம்பிக்கை மீது அவ நம்பிக்கை வந்து போகும் இது சகஜம் இந்த வகையான நம்பிக்கை என்பது தனிமனிதர் மீதானது.அது அது அவர் அவர் மனசாட்சிக்கு உட்பட்டது.நம்மை நம்பி வருவோருக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்ற கூடாது. அதிகபடியான நம்பிக்கை கொடுப்பதும் ஒருவகை துரோகம் தான்.எதுவாக இருந்தாலும் யதார்த்த சூழலை அனுபவ ரீதியாக புரிய வைப்பதே சிறப்பு.யாரோ சொன்னதை கேட்டு அதை பிறர் மீது தன் சொந்த அனுபவம் இல்லாமல் நம்பிக்கை ஊட்டி செயல் படுத்த சொல்வதும் ஒருவகையில் நம்பிக்கை துரோகம் தான்.
நான் சொல்ல வந்த நம்பிக்கை எது எனில் பிரபஞ்ச பேராற்றலின் மீதான நம்பிக்கை.நம்மை படைத்த படைத்தலின் மீதான நம்பிக்கை இது. இதை நாம் சராசரி வாழ்க்கையில் சந்தித்த அவநம்பிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டியதே இல்லை.
பிரபஞ்ச பேராற்றலை ஈர்க்க வேண்டும் என்றால் உங்கள் அவநம்பிக்கைகளை வெளியேற்றி விட்டு முழு ஈடுபாடு கொண்டு நாம் பிரபஞ்சத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு நன்றி கலந்த ரசனையோடு ஓம் எனும் பிரணவ ஒலியோடு அண்ட வெளியில் உங்கள் நல்ல எண்ணங்களை பரவ விடுங்கள்.
அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை உங்களால் காண முடியும்.
இதை நீங்கள் கடைபிடிக்க தொடங்கு போது எதிர்மறையான எண்ணம் வந்து போக வாய்ப்பு அதிகம் எனவே தான் தனிமனித நம்பிக்கை மீதான ஏமாற்றங்களை இங்கே நினைத்து கூட பார்க்காதீங்க.கோயிலுக்கு போகிறீங்க சாமியை நம்பிக்கை கொண்டு தானே வணங்கி வருகிறோம்.அதே எண்ணத்தை மட்டும் இங்கே கொண்டு வாங்க
எல்லா நன்மைகளும் உண்டாகும்
மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்.🌹
No comments:
Post a Comment